உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூரில் சுதர்சன ஹோமம்

திருப்புத்தூரில் சுதர்சன ஹோமம்

திருப்புத்துார்:திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சுதர்சனஹோமம் நடந்தது.

நேற்று (ஆக., 10ல்) காலை 8:00 மணிக்கு சக்கரத்தாழ்வார் சன்னதியில் பெருமாள், அம்பாள் எழுந்தருளினர். பின்னர் சுதர்சனஹோமம் துவங்கியது. தொடர்ந்து காலை 12:00 மணிக்கு சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தன. மாலையில் பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். இரவில் பெருமாள் திருவீதி வலம் வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !