உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி ராமானுஜர் மடத்தில் ஜெகன்நாதர் தரிசனம்

புதுச்சேரி ராமானுஜர் மடத்தில் ஜெகன்நாதர் தரிசனம்

புதுச்சேரி: அரங்க ராமானுஜர் பஜனை மடத்தில், பூரி ஜெகன்நாதர் தரிசன நிகழ்ச்சி நடந்தது. ஒடிசா மாநிலம் பூரியில் பிரசித்திப்பெற்ற ஜெகன்நாதர் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலின் உற்சவருடன் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு, விஷ்ணு சாஸ்திரி என்பவர், புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார்.ராமேஸ்வரம், மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்கு சென்ற புனித யாத்திரை நேற்று புதுச்சேரியை வந்தடைந்தது. செயின்ட் தெரேஸ் வீதியில் உள்ள அரங்க ராமானுஜர் பஜனை மடத்தில் உள்ள அத்தி ஆனந்தரங்கநாதருடன், பூரி ஜெகன்நாதர் சிறப்பு தரிசனம் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியை முன்னிட்டு, விஷ்ணு சாஸ்திரி குழுவினரின், துளசிதாசரின் சுந்தரகாண்ட நாம சங்கீர்த்தனம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, பஜனை மடத்தின் சிறப்பு அதிகாரி அன்பு செல்வன், தேவநாத ராமானுஜதாசர், பாலாஜி மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !