உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெட்டப்பாக்கம் கங்கையம்மன் கோவிலில் செடல் பிரம்மோற்சவ விழா

நெட்டப்பாக்கம் கங்கையம்மன் கோவிலில் செடல் பிரம்மோற்சவ விழா

நெட்டப்பாக்கம்: ஏம்பலம் முத்துமாரியம்மன், கங்கையம்மன் கோவிலில் 100ம் ஆண்டு செடல் பிரம்மோற்சவ விழா நேற்று நடந்தது.ஏம்பலம் முத்துமாரியம்மன், கங்கையம்மன் கோவிலில் 100ம் ஆண்டு செடல் பிரம்மோற்சவ விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையொட்டி அன்று முதல் நேற்று முன்தினம் வரை இரவு அம்மன் நாகவாகனம், காம தேனு, குதிரை வாகனம், யானை, சிங்கம் வாகனங்களில் வீதியுலா நடந்தது.நேற்று (ஆக., 9ல்) காலை காவடி உற்சவமும், பகல் 12.00 மணிக்கு பாற்சாகை நடந்தது. தொடர்ந்து சக்தி கரகம் சாமியார் குளத்திலிருந்து புறப்பட்டு வீதியுலா நடைபெற்றது.

மாலை 5.00 மணிக்கு பக்தர்கள் மார்பு மீது மஞ்சள் இடிக்கப்பட்டது. மாலை 5.30 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. செடல் உற்சவத்தில் பக்தர்கள் கார், தேர், டிராக்டர், உள்ளிட்ட வாகனங்களை செடல் போட்டு இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று (ஆக., 10) காலை 10.00 மணிக்கு மாரியம்மன் தெப்பல் உற்சவம் நடக்கிறது. நாளை (ஆக., 11ல்) காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், 12ம் தேதி இரவு 8.00 மணிக்கு ஊஞ்சல் உற்ச வம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ண மூர்த்தி, துணைத் தலைவர் கோவிந்தராசு, செயலர் ராமதாஸ், பொருளாளர் சுப்பராயன், உறுப்பினர் சுப்ரமணி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !