சிவகாசி சிவன் கோயிலில் சட்டத் தேரோட்டம்
ADDED :2361 days ago
சிவகாசி: சிவகாசி சிவன் கோயிலில் வருடந்தொறும் ஆடித்தபசு விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த வருடம் ஆக. 3 ல் கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழா தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சி முடிந்தவுடன் , சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.விழா நாட்களில் தினமும் இரவு 7:00 மணிக்கு சுவாமி, ரிஷப வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், கிளி வாகனம் , அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து அருள் பாலித்தார். இந்நிலையில் நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பின்னர் சட்டத் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தொடர்ந்து ஆக. 13 ல் தபசு விழா நடைபெறும்.