உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்தி வரதரை பார்க்க அலைமோதும் பக்தர்கள்

அத்தி வரதரை பார்க்க அலைமோதும் பக்தர்கள்

காஞ்சிபுரம்: காஞ்­சி­பு­ரம் வர­தர் கோவி­லில், பொது தரி­சன வரி­சை­யில் சென்ற பக்­தர்­கள், 12 மணி நேரம் காத்­தி­ருந்து, அத்தி வர­தரை, நேற்று தரி­சித்­த­னர். காஞ்­சி­பு­ரம் வர­த­ராஜ பெரு­மாள் கோவி­லில், ஜூலை, 1ம் தேதி முதல், அத்தி வர­தர் வைப­வம் நடக்­கிறது. இதற்­காக, நாட்­டின் பல பகு­தி­களில் இருந்து, பக்­தர்­கள் வரு­கின்­ற­னர்.

அத்தி வர­தரை, நேற்று மட்­டும், மூன்று லட்­சத்­திற்­கும் மேற்­பட்­டோர் தரி­சித்­துள்­ள­னர். பொது தரி­ச­னத்­தில் சென்று தரி­சிக்க, 12 மணி நேரம் ஆன­தால், கூட்­டத்­தில் சிக்­கிய, 25 பேர், நேற்று மயக்­க­ம­டைந்து, அரசு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். ஆக., 16ம் தேதி வரை மட்­டுமே தரி­ச­னம் என்­ப­தால், வரும் நாட்­களில், கூட்­டம் மேலும் அதி­க­ரிக்­கும். இத­னால், கூட்­டத்தை சமா­ளிக்க, மாவட்ட நிர்­வா­கம், பல நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது. பல பகு­தி­களில் இருந்து, காரில் வரு­வோரை, காஞ்­சி­பு­ரத்­தில் இருந்து, 10 கி.மீட்­ட­ருக்கு முன்பே, போலீ­சார் தடுத்தி நிறுத்தி, பக்­தர்­கள் ஓய்வு இடத்­தில் தங்க வைக்­கின்­ற­னர். பின், அங்­கி­ருந்து, சிறப்பு பஸ் மூலம், வர­தர் கோவி­லுக்கு அழைத்து செல்­கின்­ற­னர். இத­னால், நேர விரை­யம் ஏற்­ப­டு­வ­தாக கரு­தும் பக்­தர்­கள், காரை தவிர்த்து, ரயி­லில், காஞ்­சி­பு­ரம் வந்து, அத்தி வர­தர் தரி­ச­னத்­திற்கு செல்­கின்­ற­னர். ஊர் திரும்­பும் பக்­தர்­கள், காஞ்­சி­பு­ரம் பழைய மற்­றும் புதிய ரயில் நிலை­யங்­க­ளுக்கு வரும்­போது, அங்­கும், கூட்ட நெரி­ச­லால், டிக்­கெட் எடுக்க சிர­மப்­ப­டு­கின்­ற­னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !