சித்தர் குரு பூஜை
ADDED :2361 days ago
புதுச்சேரி: கோட்டக்குப்பத்தில் உள்ள ஆனந்தீஸ்வரர் சிவன் கோவிலில் ஆனந்த உத்திராபதி சித்தர் சுவாமிகளின் நான்காம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது.அதனையொட்டி கோவில் வளாகத்தில் சுவாமி உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, சித்தர் அமர்ந்திருந்த அரச மரத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பக்தர்கள், சித்தருக்கு காணிக்கையாக செலுத்திய பழம், பிஸ்கட், இனிப்பு, துணி, பூட்ட, விசில், டார்ச்லைட், பேனா, கால்குலேட்டர், நோட்டு, புத்தகங்கள் தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.