மானாமதுரை விநாயகர் சதுர்த்திக்காக தயாராகும் சிலைகள்
மானாமதுரை:செப்.,2 விநாயகர் சதுர்த்திக்காக மானாமதுரையில் நீர்நிலைகளை பாதிக்காத விநாயகர் சிலைகள் செய்வதில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வரு கின்றனர்.கல்லில் கலைவண்ணம் பெரிதல்ல, பிடிபடாத மண்ணை கட்டுக்குள் கொண்டு வந்து அவற் றிற்கு சிலை வடிவம் தரும் உன்னத பணியில் மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள 250 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்ட கூடங் களில் களிமண்ணால் தயாரிக்கப்பட்ட விளக்குகள், மண்பானை, சமையல் பொருட்களை தயாரித்து வருகின்றனர். குறிப்பாக சீசனுக்கு ஏற்ற பொருட்கள் தயாரிப்பில் இவர்களுக்கு நிகர் வேறு யாருமில்லை. அந்தளவிற்கு மண்பாண்ட பிரியர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதத்தில், கலை நயமிக்க பொருட்களை தயாரித்து அசத்துகின்றனர்.அந்த வகையில் செப்.,2ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகள் சார்பில் முக்கிய இடங்களில் விநாயகர் சிலை கள் வைத்து 3 நாட்கள் தொடர்ந்து பூஜைகள் செய்து வருவர். அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைத்து விடுவர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வீடுகளில் பூஜைக்கு தேவைப்படும் சிறு சிலைகள் முதல் அதிகபட்சம் 7 அடி உயர சிலை வரை தயாரிக்கின்றனர்.நீர்நிலை பாதிக்காத சிலைகள்இத்தொழிலில் ஈடுபடும் மாற்றுத்திறனாளி தங்கமணி 60 கூறியதாவது, நாகரிக காலத்தில் பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மூலம் தயாரித்த விநாயகர் சிலைகளை அதிகம் பயன்படுத்து கின்றனர். இவை நீர்நிலைகளுக்கு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் மானா மதுரையில் இயற்கைக்கு பாதிப்பு இல்லாத வகையில் களிமண் மூலம் சிலைகள் செய்துள் ளேன். அவற்றில் பெயின்ட் அடிக்க வர்ணபொடியை துாவுவேன். தமிழகத்தில் அனைத்து பகுதியிலும் நடக்கும் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு, இங்கிருந்து தான் சிலைகள் வாங்கி செல்லப்படுகிறது. தற்போது களிமண் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி நடக்கிறது, என்றார்.