உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவம்: 300 நாதஸ்வர வித்வான்கள் பங்கேற்பு

கரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவம்: 300 நாதஸ்வர வித்வான்கள் பங்கேற்பு

கரூர்: நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில், 10ம் ஆண்டு நாத உற்சவ பெருவிழா நேற்று (ஆக., 11ல்) நடந்தது. கரூர் அருகே, நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம், நாத உற்சவ பெருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று காலை, 6:00 மணிக்கு பிரபாகரன் குழுவினரின் மங்கள இசையுடன் சிறப்பு அபிஷேகம், ஆராதனையுடன் விழா துவங்கியது.

காலை, 8:00 மணிக்கு நாத சங்கமம், 10:00 மணிக்கு சிவ சண்முகத்தின் வழிபாட்டு நெறிமுறை கள், மதியம், 1:00 மணிக்கு பாலகிருஷ்ண குழுவினரின் இசை வழிபாடு நடந்தது. அதை தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு, 300க்கும் மேற்பட்ட நாதஸ்வர, தவில் வித்வான்கள் பங்கேற்ற, நாத உற்சவ விழா நடந்தது. அதில், பல்வேறு பக்தி பாடல்கள், தமிழிசை பாடல்கள் இசைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !