வேடசந்தூரில் கஞ்சிக்கலய ஊர்வலம்
ADDED :2344 days ago
வேடசந்தூர்: ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், ஆடிப்பூரவிழாவை முன்னிட்டு கஞ்சிக் கலய ஊர்வலம் நடந்தது.
ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றத்தில் இருந்து ஊர்வலம் துவங்கியது. நேருஜி, நகர், வட மதுரை ரோடு, பஸ் ஸ்டாண்ட், ஆத்துமேடு வழியாக கோயிலை அடைந்தது. மழை வளம் வேண்டியும், விவசாயம் மற்றும் தொழில் வளம் செழித்திடவும் ஊர்வலம் நடந்தது. பெண்கள் முளைப்பாரி எடுத்தும், அக்னி சட்டி எடுத்தும் வந்தனர்.