முத்துமாரியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :2261 days ago
தேவகோட்டை:தேவகோட்டை காசுக்கடை வீதி முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா 5ந்தேதி காப்புகட்டுதலுடன்துவங்கியது. தினமும் மாலையில் அம்மனுக்கு வெவ்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. இரண்டாம் நாள் லட்சார்ச்சனை துவங்கி எட்டாம் நாள் நிறைவு பெற்றது. ஐந்தாம் நாள் திருவிளக்கு பூஜை செய்தனர். நேற்று எட்டாம் நாள் துர்கா ேஹாமம், கோமாதா பூஜை நடந்தது. நதிகளை இணைக்க வேண்டி 1008 அம்மனுக்கு சங்காபிஷேகம் நடந்தது.இன்று பால்குடம் நடக்கிறது.