வடமதுரையில் கஞ்சி கலய ஊர்வலம்
ADDED :2265 days ago
வடமதுரை, வடமதுரையில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 16-வது ஆண்டு துவக்க விழா நடந்தது. மூன்று நாட்கள் நடந்த விழாவில், கலச விளக்கு, வேள்வி, வரலட்சுமி பூஜைகள் நடந்தன. விழாவில் இறுதி நிகழ்ச்சியாக மழை பெய்ய வேண்டியும், விவசாயம், தொழில் வளம் செழிக்கவும் 400க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கஞ்சி கலயங்கள், முளைப்பாரிகளுடன் ஊர்வலமாக சென்றனர்.