புவனகிரி அருகே அமிர்தவள்ளி மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்
ADDED :2329 days ago
புவனகிரி: புவனகிரி அருகே தெற்குத்திட்டை அமிர்தவள்ளி மாரியம்மன் கோவிலில், 41ம் ஆண்டு செடல் உற்சவ திருவிழா நடந்தது.புவனகிரி அருகே தெற்குத்திட்டை அமிர்தவள்ளி மாரியம்மன் கோவிலில், 41 ம் ஆண்டு செடல் உற்சவ திருவிழாவை முன்னிட்டு, கடந்த வாரம் காப்பு கட்டி, கொடி ஏற்றுப்பட்டது.
தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்து வந்தது. நேற்று முன்தினம் நடந்த செடல் உற்சவத்தில், ஏராளமானோர் பங்கேற்று செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர்.ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.