உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவினங்களின் நாயகி!

ஆவினங்களின் நாயகி!

எல்லா செல்வங்களையும் வாரி வழங்கக்கூடிய அன்னை கோமதி. ஆவினங்களின் நாயகி. பழங்காலத்தில் ஒருவரது செல்வம் அவரிடமுள்ள பசுக்களின் எண்ணிக்கையை வைத் தே அறியப்பட்டு வந்தது. கோ என்றால் பசு; மதி என்றால் தாய். எனவே கோமதி அம்மாள் என்றால் தாயாக இருந்து இயக்குபவள் என்று பொருள். அதன் காரணமாகவே ஆவுடையம்மன் எனப்பெயர் கொண்டாள்.


பசுக்களை மேய்த்துப் பராமரிப்பது கோமதி அம்பாளின் ஆண் ரூபமாகிய கோவிந்தனே!  கோமதி அம்மன் எனும் சக்தி பராசக்தியின் பூரண அவதாரமாகும். சிவபெருமானும், விஷ்ணுவும் ஒருங்கிணைந்து அருள்கின்ற சங்கரநாராயண அவதாரத்தின் ‘இறைவி’அம்சமாகும். பசுவாகவும், யானையாகவும், மயிலாகவும், நண்டு வடிவிலும், துளசி வடிவிலும், மானுடச் சிறுமியாகவும்... இவ்வாறாக அனைத்து வடிவுகளிலும் பலப்பல தலங்களில் எண்ணற்ற யுகங்கள் இறைவனை வணங்கி, கோமதி அம்மையாக அம்பிகை தோற்றம் கொண்டாள் என்கிறது புராணம். பெறுதற்கு அரிதான சங்கரநாரண  அம்சம் தோன்றக் காரணமான தேவியும் இவளே! பன்நெடுங்காலம் வானுல தேவர்களால் மட்டுமே வழிபடப்பெற்ற கோமதி அம்பி கையை, உத்தம சாக்த உபாசகர்களான சித்தர்களே, தமது தவத்தால் பூமிக்கு  வரவழைத்தனர். கூர்ம புராணத்தில் உள்ள கோமதி சகஸ்ரநாமமும், அண்ணாமலை ரெட்டியாரின்  கோமதி அந்தாதியும் அன்னை கோமதியின் நற்கருணையையும், திருவருளையும்  உணர்த்துவனவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !