தாய் தெய்வ வழிபாடு!
ADDED :2265 days ago
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாய் தெய்வ வழிபாடாக ’நங்கை ’ என்ற பெயரில் முடியும் பெண் தெய்வங்கள் பல இடங்களில் கோயில் கொண்டுள்ளனர். அழகியபாண்டிபுரத்தில் வீரநங்கை கோட்டாறு, குலசேகரத்தில் குலசேகரநங்கை, சீதப்பாலில் பத்மநங்கை, சுசீந்திரத்தில் முன்னுதித்தநங்கை, தெரிசனங்கோப்பில் ஸ்ரீதரநங்கை, பூதப்பாண்டியில் அழகியசோழ நங்கை, மருங்கூரில் ஆபத்து காத்த நங்கை என்ற பெயரில் பல நங்கைகள் அருள்புரிந்து வருகின்றனர்.