உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிடப்பில் பழநி இடும்பன் கோயில் கிரிவல பாதை

கிடப்பில் பழநி இடும்பன் கோயில் கிரிவல பாதை

பழநி: பழநியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இடும்பன்மலை கிரிவீதியில் இருந்து  இலவச வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு பாதை அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக  அப்படியே கிடப்பில் விடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநிக்கு வரும் பக்தர்கள் முதலில் இடும்பனை வணங்கிவிட்டு  பின் மலைக்கோயிலில் முருகனை வணங்க வேண்டும் என்பது ஐதீகம். இதனால்  வெளிமாநிலம், மாவட்ட பக்தர்கள் இடும்பன் மலைக்கு அதிகமாக வருகின்றனர். அதே  சமயம் 3 கி.மீ., சுற்றளவு உள்ள மலையைச் சுற்றி முட்செடி, கொடிகள் வளர்ந்து புதர்  மண்டியுள்ளது. பின்புறத்தில் குப்பை கொட்டுகின்றனர். வலது புறத்திலிருந்து ஏற்கனவே  மலைகோயிலுக்கு செல்ல ரோடு உள்ளது.

இடதுபுறத்தில் பைபாஸ்ரோட்டை இணைத்து புதிதாக கிரிவலப்பாதை அமைக்க  திட்டமிடப் பட்டுள்ளது. 2 ஆண்டுக்கு முன்னரே பழநி கோயில் இணை ஆணையர்,  தாசில்தார், சர்வேயர் கள் உள்ளிட்ட அதிகாரிகள் இடும்பன்மலை இடதுபுறத்தில் 40 அடி  அகல கிரிவலபாதை அமைக்க திட்டமிட்டு ஆவணங்களை ஆய்வுசெய்தனர். தற்காலி கமாக மண் பாதை பாதி தூரம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின் தனியார் நிலங்களை  கையகப்படுத்துவதில் சிக்கல் காரணமாக திட்டம் செயல்படுத்தப்படாமல் அப்படியே  கிடப்பில் விடப்பட்டுள்ளது. தைப்பூச சீசனுக்கு முன்னதாக பைபாஸ்ரோடு,  இடும்பன்மலை ரோடு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

நெரிசலுக்கு தீர்வு: இத்திட்டம் நிறைவேறினால் தைப்பூசம் மற்றும் பங்கு உத்திர  விழாக் காலங்களில் பழநி மலைக்கோயில் கிரிவீதியை சுற்றிவரும் கனரக வாகன ங்களினால் ஏற் படும் போக்குவரத்து நெரிசல் குறையும். ஆகையால் இடும்பன்மலை  கிரிவலப்பாதை திட்டத் தை விரைவில் செயல்படுத்த கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !