எல்லையம்மன் கோவிலில் தேர்த் திருவிழா
ADDED :2258 days ago
புதுச்சேரி: எல்லையம்மன் கோவில் தேரோட்டத்தை, முதல்வர் நாராயணசாமி வடம் பிடித்து துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் உள்ள எல்லையம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிேஷக ஆராதனைகளும், வீதியுலாவும் நடந்து வருகிறது. முக்கிய விழாவான தேர்த் திருவிழா நேற்று காலை நடந்தது. முதல்வர் நாராயணசாமி வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து, திரளான பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர். விழா ஏற்பாடுகளை, கோவில் தனி அதிகாரி சரவண பெருமாள் மற்றும் ஆலய அர்ச்சகர்கள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.