திருப்பூரில் அத்திவரதர்
ADDED :2265 days ago
திருப்பூர்:காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் நாளை மறுதினம் (16ம் தேதி) நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலுக்கு மத்தியில் காஞ்சிபுரம் சென்று பெருமாளை தரிசிக்க முடியாதவர் வசதிக்காக புதுராமகிருஷ்ணாபுரம் சக்திவிநாயகர் கோவிலில் சந்தனகாப்பு அத்தி வரதர் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சந்தன காப்பில் அத்திவரதர், 16, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் காலை, 7:00 முதல் இரவு, 8:00 மணி வரை விநாயகர் கோவில் அத்திவரதர் பக்தர் களுக்கு காட்சியளிக்க உள்ளார்.கோவில் அர்ச்சகர் நாராயணன் கூறுகையில், ’பக்தர்கள் முடிவு எடுத்தபடி, இதனை அத்தி வரத பெருமாள் விழாவாக நடத்த உள்ளோம்,’ என்றார்.