ஆர்.எஸ்.மங்கலம் அருகே மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா
ADDED :2347 days ago
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே பேரவயல் மாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை ஊர்வல மாக எடுத்து சென்று கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர்.
பின் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். விழா வை முன்னிட்டு இரவில் இளைஞர்களின் ஒயிலாட்டமும், பெண்களின் கும்மியாட்டமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.