உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டிபட்டி நாகம்மாள் கோயிலில் கோயிலில் ஆடித்தபசு

ஆண்டிபட்டி நாகம்மாள் கோயிலில் கோயிலில் ஆடித்தபசு

ஆண்டிபட்டி:சக்கம்பட்டி திருவள்ளுவர் காலனி நாகம்மாள் கோயிலில் ஆடித்தபசு விழா நடந்தது. யாகசாலை பூஜையுடன் துவங்கிய விழாவில் சக்கம்பட்டி கிரகத்திடலில் இருந்து அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அம்மனுக்கு பல்வேறு தீர்த்த வழிபாடும், 21 திரவிய அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. கோயில் பின்புறம் உள்ள புற்றில் பெண்கள் பால், முட்டை, மஞ்சள் வைத்து வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து கோயில் வளாகத்தில் நடந்த அன்னதானத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.மாலை அம்மன் பூஞ்சோலை அடையும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந் தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !