உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூவம் விநாயகர் கோவில் புதுப்பிக்கப்படுமா?

கூவம் விநாயகர் கோவில் புதுப்பிக்கப்படுமா?

கூவம்:கூவம் பகுதியில் உள்ள, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செல்வ விநாயகர் கோவிலை புதுப்பிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடம்பத்துார் ஒன்றியம், கூவம் ஊராட்சிக்குட்பட்டது உப்பரபாளையம். இங்கு, 1921ல், செல்வ விநாயகர் கோவில் தோற்றுவிக்கப்பட்டது.இந்த கோவிலுக்கென தனிநபர் ஒருவரால் ஒதுக் கப்பட்ட, நிலத்தின் அடிப்படையில் கோவிலில், தினமும், காலை, மாலை வேளைகளில் பூஜைகள் நடத்தப்பட்டன.அதன்பின், போதிய வருமானம் இல்லாததால், கோவிலில் நடத்தப்பட்ட பூஜைகள் குறைக்கப்பட்டு, தற்போது, தினமும் ஒருவேளை மட்டுமே பூஜை நடைபெறுகிறது.

மேலும், கோவில் மிகவும் பழுதடைந்து, மோசமான நிலையில் உள்ளது.எனவே, ஊராட்சி பகுதியில் உள்ள, செல்வ விநாயகர் கோவிலை புதுப்பித்து, மீண்டும் தினமும் பூஜைகள் நடைபெற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !