கொடைக்கானல் சலேத் அன்னை சப்பர பவனி
ADDED :2287 days ago
கொடைக்கானல்: கொடைக்கானலில் புனித சலேத்அன்னை ஆலய 153 வது ஆண்டு விழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.பிரான்சிற்கு அடுத்தபடியாக உலக புகழ் பெற்ற சலேத் அன்னை ஆலயம் கொடைக்கானலில் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆலய விழா கொடியேற்றத்துடன் துவங்கும். புனித மேரி ரோட்டிலுள்ள ஆலயத்தில் பங்குத்தந்தையர்கள், பங்குமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கனக் கானோர் சிறப்பு திருப்பலி வழிபாடு செய்து சமய வேறுபாடின்றி தங்களது வேண்டுதல்களை முன் வைத்தனர்.தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித சலத் அன்னை நகர் பகுதியில் வலம் வரும் நிகழ்வு நடந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட னர்.