கடலுார் கோவில்களில் சுதந்திர தின பொது விருந்து
ADDED :2287 days ago
கடலுார்: கடலுார் கோவில்களில் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடந்தது.திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர் ந்து, நடந்த பொது விருந்தில் கலெக்டர் அன்புச்செல்வன் தலைமை தாங்கி, பொதுமக்களோடு அமர்ந்து உணவு அருந்தினார்.
நிகழ்ச்சியில், தாசில்தார் ஜெயக்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன், கோவில் செயல் அலுவலர் முருகன், ஆய்வாளர் ராமநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். பாடலீஸ்வரர் கோவிலில் டி.ஆர்.ஓ., ராஜகிருபாகரன் தலைமையிலும், வீர ஆஞ்சநேயர் கோவிலில் சப் கலெக்டர் சரயூ தலைமையிலும் பொது விருந்து நடந்தது.