கோவை ஐயப்பன் பூஜா சங்கத்தில் பகவத் சேவை
ADDED :2287 days ago
கோவை:கோவை, ராம்நகர், ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் நடந்து வந்த, ஆடி உற்சவ ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நிறைவடைந்தது.நேற்று, ’பகவத் அபங் பஜன்’ என்ற தலைப்பில், பெங்களூருவை சேர்ந்த அபர்ணா பேசுகையில், ”சரீரம் என்பது பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது. சரீரம் இருக்கும்வரை மட்டுமே, பக்தியை சமர்ப்பிக்கலாம் என, அனைவரும் எண்ணுகிறோம்.
ஆனால், உண்மையில், சரீரம் இல்லாவிட்டாலும், பஞ்சபூதங்களின் வழியாக, நம் பக்தியை சமர்ப்பிக்கலாம். பகவானின் நாமம் செல்ல வேண்டுமானால், நாம் பல ஜென்மங்களில், புண்ணியம் செய்திருக்க வேண்டும்,” என்றார்.அம்மனைஆராதனை செய்யும் விதமாக,’பகவத் சேவை’ பூஜை இன்று 16ம் தேதி மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது.