உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்காகவும் மழைவேண்டி: 2 ஆயிரம் பெண்கள் கஞ்சிக்கலய ஊர்வலம்

உலக நன்மைக்காகவும் மழைவேண்டி: 2 ஆயிரம் பெண்கள் கஞ்சிக்கலய ஊர்வலம்

ராமநாதபுரம்: மழை வேண்டியும் உலக நன்மைக்காகவும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் 2 ஆயிரம் பெண்கள் தலையில் கஞ்சி கலயத்துடன் ஊர்வலமாக வந்தனர்.ராமநாதபுரம் சேதுபதி நகரில் அமைந்துள்ள மேல்மருத்துவர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத் தின் சார்பில் ஆண்டுதோறும் ஆக., 15 சுந்திரதினத்தன்று மழை வேண்டியும் உலகநன்மை க்காகவும் கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. 2 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட கஞ்சிக்கலய ஊர்வலம் வழிபாட்டு மன்றத்தில் தொடங்கிய ஊர்வலத்தை ராணி லட்சுமி சேதுபதி மற்றும் முன்னாள் நகர் மன்ற தலைவர் லலிதா தொடங்கி வைத்தனர்.ஊர்வலம் ரோமன் சர்ச், சாலைத்தெரு, வண்டிக்காரத்தெரு, கேணிக்கரை மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக வந்து வந்து வழிபாட்டு மன்றத்தில் நிறைவடைந்தது. ராமநாதபுரம் மாவட் டத்திலிருந்து அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சேதுபதி நகர் மன்றத்தினர் செய்திருந்தனர். ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்களின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மன்ற தலைவி கல்யாணி, வேள்வி குழு தலைவி சாந்தி உள்ளிட்டோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !