உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலங்காநல்லுார் அருகே தேவசேரி காளியம்மன் கோயிலில் பொங்கல் விழா

அலங்காநல்லுார் அருகே தேவசேரி காளியம்மன் கோயிலில் பொங்கல் விழா

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே தேவசேரி காளியம்மன்  கோயிலில் 16 ஆண்டு களுக்கு பின் ஆடி உற்ஸவ பொங்கல் திருவிழா நடந்தது.முதல் நாளன்று அம்மனுக்கு சக்திகரகம் அலங்கரித்து முளைப்பாரி ஊர்வலம்  எடுத்து வரப்பட்டது. 2ம் நாள் பொங்கல் படையல் வைத்து சிறப்பு வழிபாடு  நடந்தது. பக்தர்கள் அக்கினிசட்டி, மாவிளக்கு உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை  செலுத்தினர். 3ம் நாள் சக்திகரகம், முளைப்பாரி கரைத்த பின் சிறப்பு பூஜையுடன்  விழா நிறைவு பெற்றது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !