உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலுார் ஆடி வெள்ளி அம்மன் கோவில்களில் கோலாகலம்

சூலுார் ஆடி வெள்ளி அம்மன் கோவில்களில் கோலாகலம்

சூலுார்:ஆடி மாத கடைசி வெள்ளியை ஒட்டி, சூலுார் வட்டார அம்மன்  கோவில்களில் சிறப்பு அலங்காரம் மற்றும் விளக்கு பூஜை நடந்தது.சூலு ார்வட்டார அம்மன் கோவில்களில் ஆடி மாத கடைசி வெள்ளியை ஒட்டி, சிறப்பு  அபிஷேக அலங்கார பூஜை மற்றும் விளக்கு பூஜை நடந்தது.கரடிவாவி  வீரமாத்தியம்மன் கோவிலில் அதிகாலை அம்மனுக்கு சகலவித திரவி யங்களில்  அபிஷே கம் நடந்தது,

தொடர்ந்து அம்மனுக்கு செவ்வந்தி, சம்பங்கி, கோழிக்கொண்டை உள்ளிட்ட  பல்வேறு மலர் களால் ஆண்டாள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில்  திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

சோமனுார் சேடபாளையம் ரோடு, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், விளக்கு பூஜையும் அம்மன் ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில், தங்க கவச அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். கிழக்கு அரசூர் அங்காள ம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் முடிந்து தீபாராதனை நடந்தது.

சூலுார் காமாட்சியம்மன் கோவில், வைத்தியநாதசுவாமி கோவில்,  சின்னியம்பாளையம் கணபதீஸ்வரர் கோவில், எழுவக்கரியம்மன் கோவிலில் ஆடி  வெள்ளியை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன.அன்னூர் குன்னத்தூராம் பாளையம்,  சக்தி மாரியம்மன் கோவிலில், எட்டாம் ஆண்டு திருவிழா நேற்று (ஆக., 16ல்) நடந்தது.  

மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில், 108  திருவிளக்கு வழிபாடு நடந்தது. கோவில் பிரகாரத்தில், உற்சவர் உலா நடந்தது.  அன்னதானம் வழங்கப் பட்டது. அன்னூர், தென்னம்பாளையம் ரோடு, மாரியம்மன்  கோவிலில், ஆடி கடைசி வெள்ளி யான நேற்று (ஆக., 16ல்) விசேஷ அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பிள்ளையப்பம் பாளையம், செல்வநாயகி அம்மன் கோவிலில், செல்வநாயகி அம்மனுக்கு, அலங்கார பூஜை மற்றும் அபிஷேக பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்கெண்டையூர் சாலையில் உள்ள காமராஜ் நகரில் தேவி  கருமாரியம்மன் உடனமர் அஷ்டதாராலிங்கேஸ்வரர் கோவிலில், 34ம் ஆண்டு  ஆடிப்பெருந்திருவிழா, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இரவு பசுவையா நகர்  நாகேஸ்வரி உடனமர் நாகலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து அம்மன்  சுவாமியை அழைத்து வந்தனர். நேற்று (ஆக., 16ல்) காலை, மணி நகர் மங்கள விநாயகர் கோவிலில் இருந்து தேருடன் பால் குடம், தீர்த்தக் குடம் எடுத்து வந்து  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.அதன் பிறகு சிறப்பு  அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேட்டுப்பாளையம்  பழைய சந்தைக்கடையிலுள்ள மைக்கண் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில்  அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !