உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலையில், ஆடி வெள்ளி அம்மன் கோவில்களில் கோலாகலம்

உடுமலையில், ஆடி வெள்ளி அம்மன் கோவில்களில் கோலாகலம்

உடுமலை:உடுமலையில், ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி, கோவில்களில்,  சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிகள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.ஆடி  மாதம் அம்மன் மனம் குளிர்ந்து அருள் புரிய, கோவில்களில் சிறப்பு பூஜைகள்  நடக்கிறது. இம்மாதத்தின் கடைசி வெள்ளியான நேற்று (ஆக., 16ல்) சிறப்பு பூஜைகள் நடந்தன.கோவில்களில் எழுந்தரு ளியுள்ள அம்மன் பல்வேறு சிறப்பு  அலங்காரங்களில் அருள்பாலித்தனர்.

உடுமலை மாரியம்மன் கோவிலில், அம்மன் வளையல், மஞ்சள் சரடு என சிறப்பு  அலங்கார த்தில் எழுந்தருளினார். தென்னை மரத்துவீதி காமாட்சியம்மன், மஞ்சள்  பட்டுடுத்தி பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.சதாசிவம் வீதி தலை கொண்டம்மன்  கோவிலில், அம்மன் மஞ்சள் காப்பு, நவரத்தின கிரீடம், வளையல் அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அற்புத காட்சியளித்தார். கல்பனா ரோடு காளியம்மன் கோவிலில்,  பச்சை பட்டுடுத்தி, மலர் அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளினார்.

சீனிவாசா வீதி உச்சிமாகாளியம்மன் வளையல், கிரீடம், மாலை அணிந்து சிறப்பு  அலங்கார த்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சங்கிலிவீதி பத்ரகாளியம்மன்  கோவிலில், அம்மன் பிருத்யங்கரா தேவி அலங்காரத்தில் எலுமிச்சை மாலை  அணிந்து சிவப்பு பட்டுடுத்தி, நவர த்தின ஆபரணங்கள் அணிந்து எழுந்தருளினார்.  மேலும், அம்மன் கோவில்களில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு  பூஜைகள், அலங்கார பூஜைகள் நடந்தன. ஏராளமான பெண் கள் விரதமிருந்து  அம்மனை வழிபட்டனர்.பெண்கள் விளக்கேற்றியும், தாலி கயிறு, மஞ்சள்  குங்குமம், வளையல்கள் என மங்கலப் பொருட்களையும் வழங்கி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !