உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

பெரியகுளம் : பெரியகுளம் வடகரை போலீஸ் ஸ்டேஷனில் விநாயகர் சதுர்த்தி  விழா ஆலோசனை கூட்டம் டி.எஸ்.பி., ஆறுமுகம் தலைமையில் நடந்தது.

பா.ஜ., செயற்குழு உறுப்பினர் பி.ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட  செயற்குழு உறுப்பினர் டி.கோபிகண்ணன், இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர்  உமையராஜன், விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பாளர் ரவிக்குமார், ஆலய  பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் கடல்கிருஷ்ணமூர்த்தி, வினோத், விநாயகர்  சதுர்த்தி விழா குழுவினர்கள் வீரபத்ரன், வசந்த பாலாஜி உட்பட நிர்வாகிகள் பலர்  பங்கேற்றனர்.

செப். 1ம் தேதி பெரியகுளம் தாலுகா முழுவதும் 52 விநாயகர் சிலைகள்  பிரதிஷ்டை செய்யப் பட்டு, மறுநாள் விநாயகர் சதுர்த்தியன்று, பாம்பாற்று பாலம்,  தண்டுபாலம், மூன்றாந்தல், தெற்குதெரு உட்பட வடகரை, தென்கரை முக்கிய  பகுதிகளில் ஊர்வலமாக செல்வது என தீர்மானிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள்  முத்துமணி, சுகுமாரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !