பழநியில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்
ADDED :2347 days ago
பழநி: நெய்க்காரப்பட்டி பேரூராட்சி பெரியகலையம்புத்தூர் மகாலட்சுமியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடந்தது.
முதல்நாள் அம்மன் அலங்கார பூத்தேரில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்புரிந்தார். நேற்று (ஆக., 16ல்) ஆடிகடைசி வெள்ளியை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலு த்தினர். விழாவில் சேர்வையாட்டம் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அன்னதானம் வழங்கப் பட்டது. நெய்க்காரப்பட்டி பகுதி கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.