உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி திருவிழா கோலாகலம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி திருவிழா கோலாகலம்

சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி வெள்ளிதிருவிழாவில் அம்மன்  வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இக்கோயில் ஆடிவெள்ளிபெருந்திருவிழா கடந்த  ஆக., 9ம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர்  அபிஷேகத் துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன்  வீதி உலா நேற்று (ஆக., 16ல்) பகல் 2:30 மணிக்கு துவங்கியது. இருக்கன்குடி,  நத்தத்துபட்டி, கே.மேட்டப்பட்டி, என்.மேட்டுப்பட்டி கிராமத்தினர் செண்டா, விருது, மேளம் முழங்க அம்மனை பவனி வரச செய்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த  அம்மன் அர்ச்சுனாநதியில் இறங்கி கோயில் வந்தடைந்தார். ஓம் சக்தி பராசக்தி என கோஷமிட்டப்படி பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம், பட்டாடைகள் காணிக்கை வழங்கினர்.

இவ்விழாவையொட்டி பக்தர்கள் பொங்கல், முடிகாணிக்கை, கயிறுகுத்து என  நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், விரு நகர் உள்ளிட்ட பல் வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.  விழாவை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !