வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம்
ADDED :2539 days ago
புதுச்சேரி: வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம் நேற்று நடந்தது.
புதுச்சேரி அடுத்த வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில், ஆடிப்பெருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் அம்மனுக்கு அபி ேஷக ஆராதனை நடந்தது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று இரவு 10.00 மணிக்கு செங்கழுநீரம்மன் தெப்பல் உற்சவம் நடந்தது.இதையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தெப்பல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.வரும் 23ம் தேதி முத்துப்பல்லக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி தாசில்தார் ராஜேஷ் கண்ணா மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.