உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை

கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை

 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.அதனையொட்டி காலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் காயத்திரி ஜபமும், உற்சவர் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து வைத்து பூஜைகள் செய்தனர். விஸ்வக் சேனர் வழிபாடு, பகவத் பிரார்த்தனை செய்து காலை முதல் மாலை 6:00 மணி வரை ஏகதின லட்சார்ச்சனையை லலிதா சகஸ்ரநாம மந்திரங்களை வாசித்து அர்ச்சனை செய்தனர்.இரவு தயாருக்கு சிறப்பு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கோவில் அர்ச்சகர் தேசிக பட்டர் தலைமையிலான குழுவினர் வைபவத்தை நடத்தி வைத்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !