கடலூரில் புஷ்ப பல்லக்கில் நாகம்மன் வீதியுலா
ADDED :2608 days ago
கடலுார் : கடலுார் நாகம்மன் கோவில் செடல் உற்சவத்தின் 10ம் நாள் உற்சவத்தில் அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடந்தது.கடலுார் பஸ் நிலைய வளாகத்தில் பிரசித்திப் பெற்ற நாகம் மன் கோவிலில் செடல் பெருவிழா கடந்த 8ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் தீபாராதனைகள், சிறப்பு அலங்காரம், வீதியுலா நடந்தது.9ம் நாள் உற்சவமான செடல் பெருவிழா கடந்த 16ம் தேதி நடந்தது. 10ம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் (ஆக., 17ல்) காலை தீபாராதனைகள், சிறப்பு அலங்காரம், மாலை மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை புஷ்ப வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் கள் செய்திருந்தனர்.