உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ருட்டி காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

பண்ருட்டி காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

பண்ருட்டி: தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவிலில் ஆடி மாத  பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.பண்ருட்டி  அடுத்த தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவிலில் செடல் உற்சவம் மற்றும் சாகை  வார்த்தல் உற்சவ கொடியேற்று விழா கடந்த 15ம் தேதி நடந்தது.

16ம் தேதி காலை சக்திகரகம் கெடிலம் நதிக்கரையில் இருந்து ஊர்வலமாக வந்தது. பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 6::00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது.

தினந்தோறும் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி, வரும் 23ம் தேதி சக்திகரகம்  ஊர்வலம், பகல் 12:00 மணிக்கு செடல் உற்சவம், மாலை 4:30 மணிக்கு  திருத்தேர் ஊர்வலம், 24ம் தேதி மஞ்சள் உற்சவம், 30ம் தேதி விசேஷ ஊஞ்சல்  உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !