உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சத்திரம் சின்ன மாரியம்மன் கோவிலில், பால்குடம் ஊர்வலம்

புதுச்சத்திரம் சின்ன மாரியம்மன் கோவிலில், பால்குடம் ஊர்வலம்

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு சின்ன மாரியம்மன்  கோவிலில், செடல் உற்சவத்தையொட்டி பால்குடம் ஊர்வலம் நடந்தது.விழா  கடந்த 8 ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.  

தினமும் இரவு பல்வேறு அலங்காரங்களுடன், சுவாமி வீதியுலா நடந்தது. சிறப்பு  விழாவான செடல் உற்சவம் நேற்று முன்தினம் 17ல்,  நடந்தது.அன்று காலை 9.00  மணிக்கு 108 பால்குடம் எடுத்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து  10.00 மணிக்கு சிறப்பு ஆராதனை செய்து, 12.00 மணிக்கு சுவாமி வீதியுலா  நடந்தது. மாலை 4.00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில்  நிர்வாகிகள், பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !