விருத்தாசலத்தில் விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரம்
ADDED :2550 days ago
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் விநாயகர் சிலை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நாடு முழுவதம் வரும் செப்டம்பர் 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கிராமங்கள் முதல் நகரங்கள் வரை கோவில்கள், வீடு, அலுவலங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். பல இடங்களில் பொது மக்கள பிரம்மா ண்ட சிலைகளை வைத்து வழிபடுவர்.இதற்காக, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விருத்தாசலத்தில் காகித கூழால் ஆன விநாயகர் சிலைகள் 3 முதல் 6 அடி வரை தயாரிக்கப்படுகிறது. இது, ரூ. 3 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை விற்கப்படும் என சிலை தயாரிப்பவர்கள் தெரிவித்தனர்.