உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி கோயில் உண்டியல் திறப்பு!

இருக்கன்குடி கோயில் உண்டியல் திறப்பு!

சாத்தூர் :இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டதை தொடர்ந்து,பக்தர்களின் காணிக்கையாக ரூ.15 லட்சம் கிடைத்தது. சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், இந்த மாதத்திற்கான உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டன. மடப்புரம் காளியம்மன் கோயில் ஆணையர் கார்த்தி,இருக்கன்குடி மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் மாரிமுத்து,இந்து சமய அறநிலையத்துறை விருதுநகர் ஆய்வாளர் முத்துராமலிங்கம், பரம்பரை கோயில் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, பரம்பரை அறங்காவலர் குழு உறப்பினர்கள் ச.ராமர் பூஜாரி,மாரிமுத்துபூஜாரி முன்னிலை வகித்தனர். ஒன்பது உண்டியல்களின் பொருட்கள் கணக்கிடப்பட்டன. ரூ.15 லட்சத்து 65 ஆயிரத்தி எட்டு , 78கிராம்தங்கம், 52 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் பணம் எண்ணிக்கையில் ,விருதுநகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வாரவழிப்பாட்டு மன்ற பெண்கள், இருக்கன்குடி மாரியம்மன் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !