உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் 1008 விளக்கு பூஜை
ADDED :2264 days ago
உத்தரகோசமங்கை, : உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் சன்னதி, உள் பிரகாரங்களில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் சார்பில் உலக நன்மை வேண்டி 1008 விளக்கு பூஜை நடந்தது.
விவேகானந்தா கேந்திரத்தின் ஆயுட்காலத் தொண்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். அகில பாரத பொருளாளர் ஹனுமந்த ராவ், செயலாளர் ஐயப்பன், கேந்திர அன்பர் மணி உள்ளிட்ட ஏராளமான விவேகானந்த கேந்திர தொண்டர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.சுற்று வட்டார 40 கிராமங்களை சேர்ந்த பெண்கள் விளக்குபூஜை வழிபாட்டில் பங்கேற்று சக்தி ஸ்தோத்திரம், அர்ச்சனை, நாமாவளி உள்ளிட்டவைகளை செய்தனர். ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. ஏற்பாடுகளை கேந்திர சகோதரி சகுந்தலா, விஜயராணி ஆகியோர் செய்திருந்தனர்.