திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :2285 days ago
திருமங்கலம் : திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. அர்ச் சகர் சங்கரநாராயண பட்டர் தலைமையில் விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், பூர்ணாஹூதி செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சக்கரையம்மாள் செய்திருந்தார்.