உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கஞ்சிகலய ஆன்மிக ஊர்வலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோவை கஞ்சிகலய ஆன்மிக ஊர்வலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோவை:கோவை மாவட்ட மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில், நடந்த கஞ்சிகலய ஆன்மிக ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று, அன்னையின் திருவருள் பெற்றனர்.

மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், தொழில்வளம் பெருகவும், நாட்டில் அமைதி நிலவ வும், கோவை மாவட்ட மேல்மருவத்துார் ஆதி பராசக்தி சித்தர் சக்தி பீடங்கள் மற்றும் அனைத்து வழிபாட்டு மன்றங்களும் இணைந்து, இந்த கஞ்சிகலய ஆன்மிக ஊர்வலத்தில் பங்கேற்றன.

ஊர்வலமானது, சலிவன் வீதியில் உள்ள மாரண்ண கவுடர் பள்ளி வளாகத்தில் துவங்கி, காந்தி பார்க் வழியாக ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானம் சென்றடைந்தது. அங்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியுடன், பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், கோவை மட்டுமின்றி திருப்பூர், பொள்ளாச் சியை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அன்னையின் திருவருள் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !