கண்ணன் இருக்க கவலை எதற்கு?
ADDED :2593 days ago
கம்சனால் ஏவப்பட்ட பூதனை என்னும் அரக்கியை, கொன்றான் கண்ணன். பூதனையின் சகோதரனான அகாசுரன் ஆயர்பாடிக்கு வந்து, கண்ணன், பலராமன் மற்றும் அங்குள்ள சிறுவர்களையும் கொல்ல திட்டமிட்டான். விரும்பிய வடிவத்தில் தோன்றும் ஆற்றல் அவனுக்கு உண்டு. இந்நிலையில் பாம்பாக உருவெடுத்து பயமுறுத்தினான். ஆனால் ’கண்ணன் இருக்க கவலை எதற்கு?’ என்று பாம்பை பார்த்து சிறுவர்கள் சிரித்தனர். பாம்பின் வாய்க்குள் நுழைந்த கண்ணன் தன் உடம்பை பெரிது படுத்தவே அதன் தலை வெடித்து சிதறியது.