உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

உடுமலை மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

உடுமலை:உடுமலை, மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வரும்  25ம் தேதி நடக்கிறது. உடுமலை ராமசாமி நகரில் மாணிக்க விநாயகர் கோவில் உள்ளது.  இக்கோவி லின் கும்பாபிஷேக விழா, வரும் 24ம்தேதி, மாலை, திருவிளக்கு  வழிபாட்டுடன் துவங்கு கிறது.

தொடர்ந்து, ஐம்பெரும் பூத வழிபாடு, திருமகள் வழிபாடு நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு முளைப்பாலிகை வழிபாடு, காப்பு அணிவித்தல், முதற்கால வேள்வி, மலர் அர்ச்சனை, திரு முறை விண்ணப்பம் வழிபாடு நடக்கிறது.

இரவு, 9:00 மணிக்கு மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஆக., 25ம்தேதி, காலை, 6:30 மணி க்கு அபிஷேக பூஜையும், காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி நடக்கிறது. காலை, 8:15 மணிக்கு மாணிக்க விநாயகருக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது. தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், அன்னதானமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !