காஞ்சியில் விநாயகர் சதுர்த்தி விழா
ADDED :2205 days ago
காஞ்சிபுரம்:விநாயகர் சதுர்த்தியையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள விநாயகர் கோவில்களில், வண்ணம் தீட்டுதல், பந்தல் அமைத்தல் என, விழாவிற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.விநாயகர் சதுர்த்தி விழா வரும், செப்., 2ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், விநாயகர் சிலைகள் மற்றும் விநாயகர் குடைகள் தயாரிப்பு பணி, தீவிரமாக நடக்கிறது.அதேபோல், காஞ்சிபுரத்தில் உள்ள பெரிய விநாயகர் கோவில் மட்டுமல்லாமல் மிகச்சிறிய விநாயகர் கோவில்களிலும் விழாவிற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.முதற்கட்டமாக கோவிலு க்கு வண்ணம் தீட்டி அழகுபடுத்துதல், தரையை சமன்படுத்துதல், கோவில் வளாகத்தில் பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.