/
கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் வீரபத்திர சுவாமி கோவிலில் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்
நெல்லிக்குப்பம் வீரபத்திர சுவாமி கோவிலில் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்
ADDED :2261 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வீரபத்திர சுவாமி கோவிலில், கிருத்திகையை முன்னிட்டு, சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில், கிருத்திகையை முன்னிட்டு, 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் நடந்தது. பிறகு சுப்ரமணிய சுவாமிக்கு சங்காபிஷேகம் நடந்தது. வள்ளி தேவசேனா சமேதராய் சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத் தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.உற்சவர் சுப்ரமணிய சுவாமி கோவிலை வலம் வந்து அருள் பாலித்தார்.பூஜைகளை லோகு குருக்கள் செய்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.