உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண் டாடப்பட்டது.ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் புத்தேந்தல், பேராவூர், காட்டூரணி, நொச் சியூரணி உள்ளிட்ட 189 இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதை யொட்டி சிறப்பு பூஜைகளும், உறியடி, வழுக்கு மரம் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன.*தொருவளூர் அருகே காரேந்தல் கிராமத்தில் உள்ள சந்தான கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்றது. பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், இளைஞர்களுக்கு உறியடி போட்டி களும் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடு களை காரேந்தல் கிராம பொதுமக்கள் மற்றும் யாதவர் இளைஞர் அமைப்பினர் செய்தி ருந்தனர்.* ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் மடத்தின் தலை வர் சுவாமி சுதபானந்தர் தலைமையில் மங்கள ஆரத்தி, சிறப்பு பூஜைகளுடன் விழா கொண் டாடப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு பஜனைகளும், கிருஷ்ணர் மகிமை சொற்பொழிவு களும் நடந்தன. குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.*அச்சுந்தன்வயல் கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அலங் காரத்துடன் பாலாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.*திருப்புல்லாணி அருகே காஞ்சிரங்குடி கிராமத்தில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டுமூலவர்கள் பாமா, ருக்மணி சமேத கிருஷ்ணனுக்கு நேற்று ஆக., 23ல் காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சிறுவர், சிறுமியர் பங்கேற்ற குழு நடனம், மியூசிக்கல் சேர், காலில் பலுான் உடைத்தல், தண்ணீர் நிரப்புதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுப்போட்டிகள் நடந்தது. மாலையில் கொடியேற்றப்பட்டது.நள்ளிரவு 12:01க்கு கிருஷ்ணன் பிறந்தநாள் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இன்று ஆக., 24ல் காலை 11:00 மணிக்கு அன்னதானமும், உறியடி உற்ஸவமும்,கண்ணன் தேர் வீதியுலாவும், ஆக.,25 (ஞாயிறு) கோயில் அருகே உள்ள திடலில் காலை 10:00 மணிக்கு வடமாடு எருது கட்டுவிழா நடக்கிறது.ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட எருதுகட்டு பேரவைத்தலைவர் கே.ஆதித்தன் மற்றும் கோயில் விழாக்கமிட்டியினர் செய்து வருகின்றனர்.* கீழக்கரை அருகே கோகுலம் நகரில் 28ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. மூலவர் கள் பாமா ருக்மணி சமேத கோகுல கிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந் தது. தலைவர் மாடசாமி, செயலாளர் இருளாண்டி, அறங்காவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !