திருப்பூரில் விநாயகர் சிலை அமைவிடம் போலீசார் ஆய்வு தீவிரம்
ADDED :2266 days ago
திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகள் அமைக்கவுள்ள இடங்களை போலீசார் நேற்று 23ல் ஆய்வு செய்தனர்.
வரும் செப்., முதல் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படும்.அவ்வகையில், விநாயகர் சிலைகள் அமைக்கப்படும் இடங்கள் குறித்து உரிய அமைப்புகள் அந்தந்தப் பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில், அனுமதி கேட்டு மனு அளித்துள்ளன.அவற்றில் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் நேற்று 23ம் தேதி போலீசார் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.அனுமதி கேட்ட அமைப்புகளின் பகுதி நிர்வாகிகள் உடன் சென்று உரிய விவரங்களை தெரிவித்தனர்.