உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி அருகே கிருஷ்ண ஜெயந்தி கோலாகல விழா

அவிநாசி அருகே கிருஷ்ண ஜெயந்தி கோலாகல விழா

அவிநாசி : அவிநாசி அருகே தெக்கலுாரில் உள்ள சந்தான கோபால கிருஷ்ண  சுவாமி திருக்கோவிலில், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.

நுாற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து சுவாமி  ஊர்வலத்தின் முன் நடந்து சென்றனர். பின், தெக்கலுார் தக்ஷனா அகாடமி  நாட்டிய மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.விவேகானந்தா  சேவா கேந்திரத்தை சார்ந்த பாரதி கண்ணன், பக்தி சொற்பொழிவாற்றினார்.  குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி, கலை நிகழ்ச்சி நடத்தப் பட்டு, பரிசுகள்  வழங்கப்பட்டன. அவிநாசி ஆன்மிக நண்பர்கள் குழு சார்பில், கிருஷ்ண ஜெயந்தி  விழா கொண்டாடப்பட்டது.

ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜை செய்யப்பட்டது.அதன்பின்,  கிருஷ்ணர், ராதை வேடமிட்ட குழந்தைகள் பங்கேற்ற நான்கு ரத வீதிகளில்  நடந்தது. ஆன்மிக நண்பர்கள் குழு தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !