நாகப்பட்டினத்தில் உச்சகட்ட பாதுகாப்பில் வேளாங்கண்ணி ஆலயம்
நாகப்பட்டினம்: தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக வெளியான தகவலைய டுத்து, நாகை அடுத்த வேளாங்கண்ணி தேவாலயத்தைச்சுற்றி ஏராளமான போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடுமையான சோதனைக்கு பின் பக்தர்கள் தேவாலயத்தி ற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழத்திற்குள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர். இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளும் கடல் வழியாக தமிழகத்திற்குள் வந்திருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.இதையடுத்து இலங்கையில் இருந்து கடல் வழியாக கோடியக்கரை காட்டுப் பகுதிக்குள் பயங்கரவாதிகள் நுழைந்திருக்கலாம். அவர்கள் அங்கிருந்து சுற்றுலா தளமான வேளாங்கண்ணியில் ஊடுரு வியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் வேளாங்கண்ணியில் கடும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சையில் இருந்து 3 டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் 170 சிறப்பு தமிழக அதிரடிப்படை போலீ சார் குவிக்கப்பட்டனர். அவர்கள், நேற்று முன்தினம் 22ல் இரவு முழுவதும் வேளாங்கண்ணி யில் உள்ள 300 க்கும் மேற்பட்ட லாட்ஜ்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியுள்ளார் களா என சோதனை நடத்தினர். மேலும் தேவாலயத்தில் பலத்த சோதனைக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வேளாங்கண்ணி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.