பொன்னேரி ஓலை கொட்டகையில் விநாயகர் சிலைகளை வைக்க தடை
பொன்னேரி:’ஓலை கொட்டகைகளில் விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது, இரும்பு தகரத்திலான கூரையில் வைக்க வேண்டும்’ என, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
பொன்னேரி சரக காவல் நிலையங்களில் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவோர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, தெரியப் படுத்தும் வகையில், ஏ.எஸ்.பி., பவன்குமார் தலைமையில், நேற்று முன்தினம் 22ல், ஆலோ சனை கூட்டம் நடந்தது.
இதில், பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 100க்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், போலீசார் அறிவுறுத்தியதாவது:விநாயகர் சிலைகள், 9 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. சிலை வைக்கும் இடத்திற்கு உரியவர்களிடம், உரிய அனு மதி பெற்றிருக்க வேண்டும். ஓலை கொட்டகைகளில் வைக்கக்கூடாது.இரும்பு தகரத்தினா லான கூரைகள் அமைக்க வேண்டும். தீயணைப்பு சாதனங்கள் வைத்திருக்க வேண்டும். சிலை வைக்கும் இடத்தில் நிர்வாகிகள், 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். சிலைகளை கரைக்கும்போது மாட்டு வண்டிகளில் கொண்டு செல்லக்கூடாது.இவ்வாறு, போலீசார் அறிவு றுத்தினர்.