உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஊர்வலம்
ADDED :2572 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு தெருக்களில் பெண்கள் கோலமிட்டு வரவேற்றதுடன், அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்தனர்.